உள்ளூர் செய்திகள்

மலையடிவாரத்தில் காத்திருந்த பக்தர்கள்.

சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம்

Published On 2023-09-14 07:14 GMT   |   Update On 2023-09-14 07:14 GMT
  • ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.
  • மலைக்கு செல்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

திருமங்கலம்

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் 4,500 அடி உயரத்தில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. வனத்துறை பகுதியில் கோவில் உள்ளதால் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி முதல் நாளை (15-ந்தேதி) வரை பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட் டுள்ளது. கடந்த 2 நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரிக்கு செல்ல அதிகாலை முதலே அடிவாரத்தில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக் கானோர் காத்திருந்தனர். காலை 7 மணியளவில் வனத்துறையினர் மலையேற அனுமதித்தனர். பக்தர்களின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.

மலைக்கு செல்பவர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. மலைப்பாதை ஓடைகளில் குளிக்கக்கூடாது. இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டது. அமாவாசையை முன்னிட்டு இன்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

Tags:    

Similar News