உள்ளூர் செய்திகள்

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

Published On 2022-11-24 13:26 IST   |   Update On 2022-11-24 13:26:00 IST
  • தனியார் வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் நாளை நடக்கிறது.
  • இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.

மதுரை

மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்க ளில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.= 

Tags:    

Similar News