உள்ளூர் செய்திகள்

56.50 லட்சம் பெண்களின் மனுக்களை நிராகரித்ததால் மக்கள் அதிர்ச்சி

Published On 2023-09-13 08:25 GMT   |   Update On 2023-09-13 08:25 GMT
  • மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பித்த 56.50 லட்சம் பெண்களின் மனுக்களை நிராகரித்ததால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டினார்.
  • அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

மதுரை

மதுரையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கி கூறியதாவது:-

புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை 100 சதவீதம் நிறைவேற்றி னார்கள். கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத அவல நிலையை உருவாக்கியுள்ளனர்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்குவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தற்பொழுது ஒரு கோடியே 63 லட்சம் மக்களிடத்தில் மனுக்களை பெற்று இதில், ஒரு கோடியை 6 லட்சம் பேருக்கு தான் வழங்குவோம் என்று கூறியுள்ளனர். 56.50 லட்சம் மனுக்களை தள்ளுபடி செய்தனர் இதனால் விண்ணப்பித்த மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒரு கோடியே 98 லட்சம் குடும்பங்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி திட்டத்தை வழங்கினார். அதேபோல் அனைத்து குடும்பங்க ளுக்கும் மிக்சி கிரைண்டர் வழங்கினார். 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்க ணினி வழங்கப்பட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் அரசாக அதி.மு.க. அரசு இருந்தது .ஆனால் கொடுத்த வாக்கு றுதியை நிறைவேற்றாமல் முரண்பட்ட அரசாக தி.மு.க. ஆட்சி இருக்கிறது.

கல்வி கடனை ரத்து செய்வோம், ஐந்து பவுன் நகைஅடகு வைத்தால் ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து கூறினார்கள் ஆனால் எதையும் நிறைவேற்ற வில்லை.

அனைத்து மக்களையும் சமமாக பார்ப்பேன் என்று பதவி பிரமாணம் ஏற்றுஇன்றைக்கு இறையாண்மைக்கு எதிராக உதயநிதி பேசுவதால் அவரது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

நான் டெல்டாக்காரன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் இன்றைக்கு விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைத்து விட்டார் .இன்றைக்கு சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, இதற்கு தீர்வு காணாமல் அதை திசை திருப்ப சனாதனம் பற்றி உதயநிதி பேசுகிறார்.இதற்கு ஆதரவாக ஸ்டாலின் திராவிட தலைவர்களை ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டு வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News