உள்ளூர் செய்திகள்

ஓட்டை-உடைசல் பஸ்களை இயக்குவதாக பயணிகள் புகார்

Published On 2023-03-31 07:57 GMT   |   Update On 2023-03-31 07:57 GMT
  • ஓட்டை-உடைசல் பஸ்களை இயக்குவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
  • தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர்.

மதுரை

மதுரை மாநகரம் சென்னைக்கு அடுத்து முக்கிய நகரமாக விளங்குகிறது. இங்கு தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரை பகுதியில் செயல்பட்டு வரும். தொழில் நிறுவனங் களில் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

தூங்கா நகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரை மாநகருக்கு 24 மணி நேரமும் பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அரசு பஸ்கள் போதுமான அளவில் வில்லை. மதுரை மாவட்டத்தில் இயக்கப்படும் பஸ்களில் பெரும்பாலான பஸ்கள் ஓட்டை, உடைசல் பஸ்களாகவே உள்ளன. அவைகளில் கம்பிகள் உடைந்து நீட்டிக்கொண்டு பயணிகளை பயமுறுத்துகின்றன.

சில பஸ்களில் இருக்கைகள் அமர முடியாத அளவில் கிழிந்து சரிந்து சேதமாக காட்சியளிக் கின்றன. சில டவுன் பஸ்கள் தள்ளாடியபடியே செல்கின்றன. மழை காலங்களில் பல பஸ்களின் மேற்கூரை சேதமாகி பஸ்சுக்குள் தண்ணீர் ஒழுகுகிறது. அப்போது பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் கடும் அவதிப்படுகின்றனர். சில பஸ்களில் குடை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே தற்போதுபெண்களுக்கு கட்டணமில்லா பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த பஸ்களில் பல போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் அதில் பயணம் செய்யும் போது சர்க்கஸ் வாகனங்களில் செல்வது போல் உள்ளது.

மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் காலை மற்றும் மாலை நேரங்களில் செல்ல போதிய பஸ்கள் இல்லாததால் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு பயணம் செய்கின்றனர். இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் பஸ் நிறுத்தம் வரும்போது டிரைவர்கள் பெயரளவுக்கு நிறுத்திவிட்டு அவர்கள் ஏறுவதற்குள் பஸ்களை எடுத்துச்செல்கின்றனர். இதேநிலை மகளிர் கட்டணமில்லா பஸ்களிலும் உள்ளது.

எனவே பயணிகளின் நலன் கருதி மதுரை மாவட்டத்திற்கு தேவையான அளவு கூடுதல் பஸ்களை இயக்கவேண்டும். புதிதாக வாங்கப்படும் பஸ்களை அதிகமாக மதுரைக்கு வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News