ஒத்தக்கடை காளமேகப் பெருமாள் கோவில் திருக்கல்யாணம்
- ஒத்தக்கடை காளமேகப் பெருமாள் கோவில் திருக்கல்யாணம் வருகிற 5-ந்தேதி நடக்கிறது.
- 4-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) ஆண்டாள் வீதி உலா நடக்கிறது.
மேலூர்
மதுரை ஒத்தக்கடை அருகே உள்ளது திருமோ கூர். இங்கு பிரசித்தி பெற்ற காளமேகப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டுக்கான காளமேகப் பெருமாள் திருக்கல்யாணம் மற்றும் தெப்ப உற்சவ விழாவை யொட்டி வருகிற (3-ந்தேதி) ஆண்டாளுக்கு எண்ணை காப்பு உற்சவம் நடக்கிறது. 4-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) ஆண்டாள் வீதி உலா நடக்கிறது.
5-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் மோகனவள்ளி தாயார் சன்னதி முன் மண்டபத்தில் காளமேக பெருமாள்-ஆண்டாள், ஸ்ரீதேவி- பூமிதேவியுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
அன்று இரவு 7 மணிக்கு புஷ்ப பல்லக்கில் சுவாமி-அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. 6-ந்தேதி இரவு 7 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் தக்கார் செல்வி, செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.