உள்ளூர் செய்திகள்
மலேரியா விழிப்புணர்வு கருத்தரங்கு
- வாடிப்பட்டியில் மலேரியா விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
- மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மலேரியா விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டனர்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கச்சகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக மலேரியா விழிப்புணர்வு கருத்தரங்கு கண்காட்சி தாய் மெட்ரிக் பள்ளியில் நடந்தது. கருத்தரங்கிற்கு மாவட்ட மலேரியா அலுவலர் வரதராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், மருத்துவ அலுவலர் சந்திர பிரபா, இளநிலை பூச்சிகள் ஆய்வாளர் ராமு, கணேஷ் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், பிரபாகர், சதீஷ், இனியகுமார், மாணவ மாணவிகள் கலந்துகொண்டு மலேரியா விழிப்புணர்வு கண்காட்சியை பார்வையிட்டனர்.