உள்ளூர் செய்திகள்
- வாடிப்பட்டியில் உள்ள காந்திஜி அரசு பள்ளியில் ஆண்டு விழா நடந்தது.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார்.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி பேரூராட்சி பொட்டுலுப்பட்டி அரசு உதவி பெறும் காந்திஜி ஆரம்பப்பள்ளியின் 70-வது ஆண்டு விழா நடந்தது. செயலாளர் நாகேசுவரன் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் ஷாஜகான், வட்டார வளமைய (பொறுப்பு) மேற்பார்வை யாளர் தமிழ்செல்வி, பேரூராட்சி கவுன்சிலர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். பள்ளி கல்வி குழு தலைவர் தனபால் வரவேற்றார். தலைமை ஆசிரியர் வேங்கடலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். தேர்வு மற்றும் விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சமூக ஆர்வலர் ஸ்ரீதர் ரங்கராஜன் பரிசு வழங்கினார். ஆசிரியர்கள் ஆசிர்வாதம் பீட்டர், எஸ்தர்டார்த்தி மற்றும் மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. ஆனந்தி நன்றி கூறினார்.