உள்ளூர் செய்திகள்

தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை: ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு

Published On 2023-04-26 08:27 GMT   |   Update On 2023-04-26 08:27 GMT
  • தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டியுள்ளார்.
  • முதல்வர் பல்வேறு திட்டங்களை நிறுத்தி விட்டார்.

மதுரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியத்தில் உள்ள கச்சை கட்டியில் புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடந்தது. ஒன்றிய செயலாளர் காளிதாஸ் தலைமை தாங்கினார். இந்த முகாமை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தமிழக மக்களுக்கு விடியல் தருவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் தாலிக்கு தங்கம் திட்டம், கறவை மாடுகள் ஆடுகள் வழங்கும் திட்டம், பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறுத்திவிட்டார்.

தமிழகத்தில் கனிம வள கொள்ளை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து சட்ட மன்றத்தில் எடப்பாடியார் தொடர்ந்து வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்ட த்தில் மணல் திருட்டு குறித்து கிராம நிர்வாக அதிகாரி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். ஆனால் பட்டப்பகலில் அவரை அவரது அலுவலகத்தில் வெட்டி கொலை செய்து ள்ளனர். இதற்கு ரூ.1 கோடியை முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். பணம் கொடுத்தால் போதுமா? உயிர் திரும்பி வருமா? அவர் என்ன பாவம் செய்தார்?.

இன்றைக்கு அரசு ஊழியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அப்படி இருக்கும்போது சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சரவணன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் வெற்றிவேல், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News