உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாமில் கலந்து கொண்டவர்கள்.
அவனியாபுரத்தில் தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம்
- அவனியாபுரத்தில் தி.மு.க. சார்பில் மருத்துவ முகாம் நடந்தது.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடந்தது.
அவனியாபுரம்
மதுரை அவனியாபுரம் 92-வது வார்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கவுன்சிலர் கருப்புசாமி ஏற்பாட்டில் அபி ரத்த பரிசோதனை நிலையத்துடன் இணைந்து மருத்துவ முகாம் நடந்தது.
வட்ட செயலாளர் வழக்கறிஞர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் கிருஷ்ண பாண்டி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். பின்னர் மந்தை அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் திருப்பரங் குன்றம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அன்பாலயம் செல்வம், தனுஷ்கோடி, பாலமுருகன், சிவமணி, சிவமுருகன், பிரசாந்த், பாண்டியராஜன், தமிழ் அகிலன், முத்துக்கருப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.