உள்ளூர் செய்திகள்

திருப்பாலை, மூன்றுமாவடி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு

Published On 2023-06-13 08:46 GMT   |   Update On 2023-06-13 08:46 GMT
  • திருப்பாலை, மூன்றுமாவடி பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு செய்தார்.
  • சாலை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

மதுரை

மதுரை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் கடந்த வாரம் பொறுப் பேற்றுக் கொண்டார். இதைத்தொடர்ந்து மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் செய்யப் பட்டுள்ள அடிப்படை வசதி கள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்ட அவர் திருப் பாலை, மூன்றுமாவடி, கண்ணனேந்தல் உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் சாலை மற்றும் வீதிகளில் அள்ளப்படாமல் இருந்த குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கமிஷனர் பிரவீன்குமார் குடிநீர் சரியாக வருகிறதா? என்று கேட்டறிந்தார். சில பகுதிகளில் குடிநீர் குறைந்த அளவில் கிடைப்பதாக பொதுமக்கள் புகார் தெரி வித்தனர்.

அதனை சரிசெய்ய அதி காரிகளுக்கு அவர் உத்தர விட்டார். பல்வேறு இடங்க ளில் ஆய்வு செய்த மாநக ராட்சி கமிஷனர் பிரவீன் குமாரிடம் பொதுமக்கள் தரமான சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன் விவரம் வருமாறு:-

மண்டலம் 1-க்கு உட்பட்ட பகுதிகளில் கவுன்சிலர்கள், முக்கிய பிரமுகர்கள் வசிக்கும் பகுதிகளில் மட்டும் தார்சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. கண்ணனேந்தல், மூன்றுமாவடி, திருப்பாலை, தபால் தந்திநகர், பார்க் டவுண் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட வீதிகள் இன்னும் முழுமையாக சரி செய்யப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் சாலைகளில் செல்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பல்வேறு பகுதிகளில் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்த நிலையில் முறையான சாலைகள் அமைத்து தராததால் பொதுமக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் கோரிக்கை மனுக்களைகொடுத்தும் நடவடிக்கை இல்லை.

இவ்வாறு அவர்கள் கமிஷனரிடம் தெரிவித்துள்ளனர். மேலும் அவரிடம் உடனடியாக சாலைகள் அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கையும் விடுத்தனர். குடியிருப்போர் சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் தனித்தனியாக மனுக்களை அளித்து உடனடியாக சாலை அமைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News