உள்ளூர் செய்திகள்

விபத்தில் உருக்குலைந்த ஷேர் ஆட்டோ.

சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதல்

Published On 2023-03-25 13:48 IST   |   Update On 2023-03-25 13:48:00 IST
  • சாலையோரம் நின்ற லாரி மீது ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது.
  • காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வாடிப்பட்டி

கோவையில் இருந்து திராட்சை பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டுக்கு வந்தது. அங்கு பழங்களை இறக்கி விட்டு மீண்டும் கோவை செல்வதற்காக மதுரையில் இருந்து புறப்பட்டது.

மதுரை- திண்டுக்கல் தேசிய நான்கு வழிச்சாலையில் இன்று காலை சமயநல்லூர் அருகே உள்ள கட்டப்புளிநகர் கருப்பு கோவில் முன்பு லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் குளிக்க சென்றார்.

அப்போது சமயநல்லூரில் இருந்து பிஸ்கட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் மீனா, மலர்விழி வள்ளியம்மாள் மற்றும் ஒருவரை ஏற்றிக்கொண்டு ஷேர் ஆட்டோ நகரிக்கு சென்று கொண்டிருந்தது. இதை டிரைவர் முருகன் ஓட்டினார்.

அந்த ஆட்டோ எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது.

இதில் ஆட்டோவின் மேற்கூரை சேதமடைந்தது. இதில் பயணம் செய்த 5 பேரும் ஈடுபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சமயநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படு காயம் அடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News