உள்ளூர் செய்திகள்

பெண் மீது சரமாரி தாக்குதல்

Update: 2022-10-06 09:55 GMT
  • சிகரெட் தர மறுத்ததால் பெண்ணை தாக்கிய சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை

மதுரை அவனியாபுரம் செம்பூரணி ரோட்டைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி காளியம்மாள் (வயது 55). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு இவரது கடைக்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் பணம் தராமல் சிகரெட் கேட்டுள்ளனர். காளியம்மாள் தர மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் உருட்டுக்கட்டையால் காளியம்மாளை சரமாரியாக தாக்கினர். மேலும் அவரது மகனின் மோட்டார் சைக்கிளையும் அந்த கும்பல் அடித்து நொறுக்கியது.

இதுகுறித்து காளியம்மாள் அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவனியாபுரம், பெரியசாமி தெரு பாஸ்கரன் மகன் ஆப்ரகாம் (வயது 24), ஜே.ஜே நகர் பாலசுப்பிரமணியம் மகன் மணிகண்டன் ( 21), அவனியாபுரம், அம்பேத்கார் நகர் பாறைகனி மகன் அருண்குமார் ( 19), பிரசன்னா காலணியை சேர்ந்த 17 வயது சிறுவன், அவனியாபுரம், அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜா ( 39) ஆகிய 5 பேரை கைது செய்தனர். தப்பி ஓடிய மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News