உள்ளூர் செய்திகள்

வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு டாக்டர் நாகேந்திரன் பரிசு வழங்கினார்.

போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

Published On 2023-01-11 09:17 GMT   |   Update On 2023-01-11 09:17 GMT
  • மதுரை அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
  • இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு நாடா சங்கம் சார்பில் நடந்தது.

மதுரை

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் மற்றும் சிவப்பு நாடா சங்கம் சார்பில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் மல்லிகா தலைமை வகித்தார். முத்தமிழ் மன்ற தலைவர் சங்கரலிங்கம் வாழ்த்துரை வழங்கினார். உதவிப் பேராசிரியை சங்கீதா வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தேவகி மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் பி.எஸ். நாகேந்திரன் பேசுகையில், கல்லூரி மாணவர்கள் மது, புகையிலை, சிகரெட், வெற்றிலை, பாக்கு என எந்த போதைப் பொருள்களுக்கும் அடிமையாகிவிடக் கூடாது. போதைப் பொருள்களுக்கு அடிமையானால் மனநல பாதிப்பு, இதயம், நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்ற உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகி வாழ்க்கை அழிவுப்பாதைக்கு சென்றுவிடும். ஆகையால் மாணவர்கள் விழிப்புணர்வுடன் உண்மை, உழைப்பு, உயர்வு ஆகியவற்றை மட்டும் மனதில் வைத்து செயல்படுங்கள் என்றார்.

நிகழ்ச்சியில் நடந்த வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் நாகேந்திரன் பரிசுகள் வழங்கினார். உதவிப் பேராசிரியை கோதைக்கனி நன்றி கூறினார்.

Tags:    

Similar News