தமிழ்நாடு செய்திகள்
மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
- மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
- டாக்டர் எஸ்.தருமாம்பாள் நினைவிடத்தில் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ந்தேதி மொழிப்போர் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று சென்னை மூலக்கொத்தளத்தில் மொழிப்போர்த் தியாகிகள் தாளமுத்து-நடராஜன் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர்த் தியாகிகள் நினைவிடம் நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணியாக சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி கருப்பு உடையில் சென்று மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
மூலக்கொத்தளத்தில் உள்ள டாக்டர் எஸ்.தருமாம்பாள் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.