விநாயகர் சதுர்த்தியையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு இன்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டிருந்தது. விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படையலிடுவதற்காக பட்டர்கள் சுமந்து வந்தனர்.
மதுரை மேலமாசிவீதி விநாயகர் கோவிலில் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு விநாயகர் அருள்பாலித்தார்.
நேதாஜி ரோடு பாலதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தங்க கவசத்தில் அருள்பாலித்த விநாயகர்.
முக்குறுணி விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல்
- முக்குறுணி விநாயகருக்கு ராட்சத கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டது.
- வீடுகள், பொதுஇடங்களிலும் மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மதுரை
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொது இடங்களில் கொண்டாடப்படவில்லை. அந்த சமயத்தில் வீடுகளில் பொதுமக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தி னர்.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. கோவில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் பங்கேற்புடன் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை உற்சாகத்துடன் கொண்டாட பொதுமக்கள் சிறிது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வாங்கினர். மதுரை மாட்டுத்தாவணி மற்றும் மார்க்கெட்டுகளில் விநாயகர் சிலைகள் விற்பனை அமோகமாக நடந்தது.
சதுர்த்தி பூஜையின் முக்கிய அங்கமான அரு கம்புல், எருக்கம் மாலைகள், வண்ண வண்ண மலர்கள் விற்பனையும் அதிக அளவில் இருந்தது. மார்க்கெட்டு களில் பொது மக்களும் திரண்டு பூஜைக்கு தேவையான வாழைக்கன்று, அவல், பொரி, ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், பேரிக்காய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்களையும் ஆர்வத்துடன் வாங்கினர்.
இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது 18 படி அரிசியில் தயாரிக்கப்பட்ட ராட்சத கொழுக்கட்டையை சுமந்து வந்து விநாயகருக்கு படையல் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசித்தனர்.
மதுரையில் உள்ள அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
வீடுகளிலும் பொது மக்கள் உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகிறார்கள். விநாயகர் சிலைகளை பூஜை அறையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். முக்கிய இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள், இந்து அமைப்புகள் வைத்து வழிபாடு நடத்துகிறார்கள். விநாயகர் சதுர்த்தியை யொட்டி மதுரையின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் பலப் படுத்தப்பட்டு இருந்தது.
விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைப்பதற்கு தேவையான முன்னேற்பாட்டு நட வடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான நீர்நிலை கள் பற்றிய விவரமும் அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுஇடங்களில் விநாய கர் சிலைகள் வைக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரையில் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா களை கட்டி உள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.