உள்ளூர் செய்திகள்

நெருக்கமாக இருந்த படம், வீடியோவை காதலியின் கணவருக்கு அனுப்பிய வாலிபர்

Published On 2023-06-25 14:01 IST   |   Update On 2023-06-25 14:01:00 IST
  • நெருக்கமாக இருந்த படம், வீடியோவை காதலியின் கணவருக்கு அனுப்பிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
  • மேலும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.

மதுரை

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் மதுரை கூடல்புதூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்தார். திருமண ஆசை காட்டி அந்த பெண்ணுடன் பலமுறை கார்த்திகேயன் உல்லாசமாக இருந்துள்ளார்.

அப்போது காதலிக்கு தெரியாமல் நெருக்கமாக இருக்கும்போது செல்போனில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். இந்தநிலையில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடந்தது. அதன் பின்பும் உல்லாசமாக இருக்க அந்த பெண்ணை கார்த்திகேயன் அழைத்துள்ளார்.

ஆனால் அதற்கு அவரது காதலி மறுத்துவிட்டார். இதனால் தன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை காட்டி மிரட்டி காதலியை உல்லாசமாக இருக்க வருமாறு அழைத்துள்ளார்.

இருப்பினும் அந்த பெண் சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், காதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் கணவருக்கும் அனுப்பியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News