எஸ். தங்கப்பழம் சட்டக் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
- வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சட்டக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு இணைய தள குற்றங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துக் கூறினர்.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் சட்டக்கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
தங்கப்பழம் கல்விக் குழுமங்களின் செயலாளர் எஸ்.டி.முருகேசன் ஆலோசனையின் பேரிலும் சட்டக்கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி மற்றும் துணை முதல்வர் காளிச்செல்வி அறிவுறுத்தலின் பேரிலும் நடைபெற்ற இந்த சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உதவிப் பேராசிரியர் தலைமையில் சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மோட்டார் வாகனச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், கல்வி பெறும் உரிமை, பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் இணைய தள குற்றங்கள் குறித்து, வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளிடம் எடுத்துக் கூறினர்.
முன்னதாக வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன் வரவேற்று பேசினார். முடிவில் தங்கப்பழம் சட்டக்கல்லூரி நிர்வாகம் சார்பில் உதவி பேராசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.