உள்ளூர் செய்திகள்

வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி. 

விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு அடிப்படை வசதிகள் வழங்க கேட்டு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2022-09-29 07:38 GMT
  • அடிப்படை வசதிகள் வழங்க கேட்டு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • நீதிமன்றத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.

கடலூர்:

விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் வழங்க கேட்டு அனைத்து வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நீதிமன்றத்தை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம். விருத்தாசலம் சேலம் ரோட்டில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு பொதுப்பணித்துறை சார்பில் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நீதிமன்றத்திற்கு சரிவர குடிநீர் விநியோகம் வழங்கவில்லை.

இதன் பேரில் பொதுப்பணி துறையிடம் பல முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்தும் குப்பைகளை சரிவர அகற்றாமல் குப்பை மேடாக காட்சி அளிக்கும் நீதிமன்றத்தை தூய்மைப்படுத்த நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தியும் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க வழக்கறிஞர்கள் நீதிம ன்றத்தை புறக்கணித்து நீதிமன்றம் முன்பு பொதுப்பணி துறை மற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் நீதிமன்ற வளாகத்திலேயே இருக்கும் குடிநீர் மற்றும் சுகாதார சீர்கேடு பிரச்சினையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் செய்தது விரு த்தாசலம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News