உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை - மனைவி படுகாயம்

Published On 2023-07-15 14:49 IST   |   Update On 2023-07-15 14:49:00 IST
  • முத்துமாரி, தனது கணவரிடம் முன்தொகை பணத்தை தன்னிடம் தந்தால் மட்டுமே கையெழுத்து போட வருவதாக தெரிவித்தார்.
  • வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,

கோவை வால்பாறை அய்யர்பாடி முதல்பிரிவை சேர்ந்தவர் சபரிகிரி (வயது41). கூலித்தொழி லாளி. இவரது மனைவி முத்துமாரி.

இவர்களுக்கு அந்த பகுதியில் நிலம் ஒன்று இருந்தது. அந்த நிலத்தை சபரிகிரி வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளார்.

நிலத்தை விற்பதற்காக நிலத்தை வாங்குபவரிடம் இருந்து முன்தொகை வாங்கி வைத்திருந்ததாக தெரிகிறது.

இதனை முத்துமாரி அறிந்து கொண்டார். இந்த நிலையில் சபரிகிரி நிலத்தை கிரயம் செய்து கொடுக்க முடிவு செய்து, தனது மனைவியை கையெழுத்து போட வருமாறு அறிவுத்தினார்.

அப்போது முத்துமாரி, தனது கணவரிடம் முன்தொகை குறித்து கேட்டுள்ளார். மேலும் முன்தொகை பணத்தை தன்னிடம் தந்தால் மட்டுமே கையெழுத்து போட வருவதாக தெரிவித்தார்.

இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த, சபரிகிரி தனது மனைவியிடம் நீ கையெழுத்து போடவரவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியுள்ளார்.

கணவர் சும்மா சொல்கிறார் என நினைத்து முத்துமாரி இருந்தார். சிறிது நேரத்தில் சபரிகிரி வீட்டில் இருந்த டீசலை எடுத்து தன் உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவி எரிந்தது. வலியால் துடித்த அவர் அலறி சத்தம் போட்டார். இதனை பார்த்ததும் முத்து மாரி அவரை காப்பாற்று வதற்காக ஓடி சென்றார். அப்போது, அவர் மீதும் தீ பற்றியது.

2 பேரும் தீயில் சிக்கி, அபய குரல் எழுப்பினர். அவர்களது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் தீயை அணைத்து, தீயில் சிக்கி காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு 2 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் 2 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு 2 பேரும் தீவிர சிகிச்ைச பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி சபரிகிரி பரிதாபமாக உயிரிழந்தார். காயம் அடைந்த அவரது மனைவி முத்துமாரிக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் வால்பாறை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News