உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் தலைத்தேர்தல்...?- எல்.முருகன்

Published On 2023-07-08 15:50 IST   |   Update On 2023-07-08 15:50:00 IST
  • மத்திய மந்திரி எல்.முருகன் இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை.
  • வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

மத்திய மந்திரி எல்.முருகன் இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம் தொகுதியிலும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் தொகுதியிலும் போட்டியிட்டார். எம்.பி. தேர்தலில் இதுவரை அவர் போட்டியிடவில்லை.

வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, எல்லோரும் அப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் அதை கட்சி தலைமை தான் அறிவிக்க வேண்டும். தலைமை எந்த முடிவை அறிவித்தாலும் ஏற்றுக்கொள்வேன் என்றார்.

Tags:    

Similar News