உள்ளூர் செய்திகள்

கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

ஒட்டன்சத்திரம் அருகே கருப்பணசாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-09-10 10:02 IST   |   Update On 2022-09-10 10:02:00 IST
  • அம்பிளிக்கையில் பிறை கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  • பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் அருகே அம்பிளிக்கையில் பிறை கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 7 மணிக்கு யாக பூஜை, சூரிய பூஜை, த்வாரா பூஜை, வேதி கார்ச்சனா நாடி சந்தானம்,ஸபர்சாஹீதி ஹமிதநாஜ்ய திரவிய ஹோமம் மஹாபூர்ணாகுதி, தீபாராதனை, யாத்ரா தானம்,கிரகபரீத்தி கலம் புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.

காலை 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் பிறை கருப்பணசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு தச தரிசனம், மஹா அபிஷேகம் பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் மற்றும் அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோடந்தூர் மணியம்குல பங்காளிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News