கிருஷ்ணகிரிஅரசு மருத்துவக்கல்லூரி டீன் இடமாற்றம்
- கடந்த, 2021ல் அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டடம் திறக்கப்பட்டு, கடந்தாண்டு முதல் மருத்துவ சேவையும் தொடங்கப்பட்டது.
- மருத்துவக்கல்லூரி டீனாக நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக கடந்த, இரு மாதங்களுக்கு முன் ராஜஸ்ரீ என்பவர் நியமிக்கப்பட்டார். இவர், தற்போது திருவள்ளூர் மருத்துவக்கல்லூரி முதல்வராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவக்கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த, 2021ல் அரசு மருத்துவக்கல்லூரி புதிய கட்டடம் திறக்கப்பட்டு, கடந்தாண்டு முதல் மருத்துவ சேவையும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில், மருத்துவக்கல்லூரி டீனாக நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது நியமிக்கப்படும் மருத்துவக்கல்லூரி முதல்வரையாவது குறைந்தபட்சம் இரண்டாண்டுகள் பணியிட மாற்றம் செய்யாமல் இருந்தால் மட்டுமே திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற முடியும் என மருத்துவமனை ஊழியர்கள் கூறுகின்றனர்.