கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் 5 பேர் பலி
- கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார்.
- இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் பாலநாயக்கன பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் முனிராஜ் (வயது36). இவர் நேற்று சென்னை-கிருஷ்ணகிரி சாலை ஓரப்பம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மோதி சம்பவ இடத்தில் பலியானார்.
இதேபோல் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சாஜஸ் ( 52) இவர் நேற்று ஓசூர் அடுத்த மூக்காண்டப்பள்ளியில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி பலியானார்.
தேன்கனிக்கோட்டை சாரண்டபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாஞ்சாள் (45). இவர் நேற்று பைக்கில் நிலை தடுமாறி விழுந்து பலியானார்.
=இதேபோல் ஊத்தங்கரை அடுத்த எம்.வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (29). இவர் ஊத்தங்கரை- கல்லாவி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது கார் மோதி விபத்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.
அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம், தளி தொட்டி கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரீஷ், நேற்று பாலதொண்ட பள்ளியில் இருந்து லக்கசமுத்திரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலியானார்.