பார்வதிபுரம் பாலத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
- பார்சல் ஏற்றி வந்த வாகனம் மோதியது
- போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை
நாகர்கோவில் :
நாகர்கோவிலில் இருந்து தோட்டியோடு நோக்கி வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் நேற்று நள்ளிரவு சென்று கொண்டிருந்தார்.
பார்வதிபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே பார்சல் ஏற்றி வந்த வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ரத்த வெள் ளத்தில் கிடந்த அவரை சிகிச்சைக்காக ஆசாரிப்பள் ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது. பலியானவர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்? என்ற விவரம் தெரிய வில்லை.
மோட்டார் சைக்கிளிலும் பதிவு எண் இல்லாததால் பலியானவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட் டுள்ளது. போலீசார் பலியா னவர் குறித்த விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
விபத்து குறித்து போக்கு வரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண் டுள்ளனர்.