உள்ளூர் செய்திகள்

குமரி மாவட்டத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 15 ஆக குறைந்தது

Published On 2022-07-19 12:02 IST   |   Update On 2022-07-19 12:02:00 IST
  • குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க தொடங்கியது
  • மாவட்டம் முழுவதும் 946 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 15 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது.

நாகர்கோவில் :

குமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து கொரோனா பாதிப்பு வேகம் எடுக்க தொடங்கியது.

மேற்கு மாவட்ட பகுதிகளான குருந்தன் கோடு, மேல்புறம் ஒன்றிய பகுதிகளில் பலரும் பாதிக்கப்பட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து நாகர்கோவில் மாநகரிலும் பாதிப்பு அதிகரித்தது. இதனால் தினசரி பாதிப்பு 100-ஐ நெருங்கியது.

பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை யடுத்து சுகாதாரத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்தியது. காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொரோனா சோதனை நடத்த நடவடிக்கை மேற்கொண்டனர். தினமும் ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் 50-க்கும் மேற்பட்டவருக்கு தொற்று இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் 946 பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் 15 பேருக்கு மட்டுமே தொற்று உறுதியாகி உள்ளது. அகஸ்தீஸ்வரம், ராஜாக்கமங்கலம், தக்கலை தாலுகாக்களில் தலா 2 பேரும், நாகர்கோவில், திருவட்டார் பகுதிகளில் தலா 3 பேரும், குருந்தன்கோடு, கிள்ளியூர், தோவாளை பகுதிகளில் தலா ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் இன்று வரை 21,163 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News