உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

Published On 2023-09-01 08:30 GMT   |   Update On 2023-09-01 08:30 GMT
  • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
  • நாகர்கோவில் கோணத்தில் ரூ.2.50 கோடியில் அறிவுசார்மையம் கட்டப்பட்டு வருகிறது.

நாகர்கோவில் :

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 20-வது வார்டு எம்.பி.என்.நகர் மற்றும் சி.எம்.சி. நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 42- வது வார்டுக்குட்பட்ட பாரதி நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் தளம், 27-வது வார்டு ஆசாரிமார் தெருவில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம், 14 மற்றும் 15-வது வார்டு சாஸ்தான் கோவில் தெருவில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது. இதனை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

இதில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்த் மோகன், மாநகர பொறியாளர் பாலசுப்பிரமணியன், இளநிலை பொறியாளர் ராஜா, மண்டல தலைவர்கள் ஜவகர், செல்வகுமார், அகஸ்டினா கோகிலவாணி, சுகாதார ஆய்வாளர்கள் ஜான், மாதவன் பிள்ளை, மாணவரணி அமைப்பாளர் அருண்காந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

நாகர்கோவில் கோணத்தில் ரூ.2.50 கோடியில் அறிவுசார்மையம் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணியை மேயர் மகேஷ் இன்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

அறிவுசர்மையம் மாணவர்களுக்கு மிகப்பெரிய வழிகாட்டி மையமாக அமையும். தற்போது பணிகள் வேகமாக நடந்து வருகிறது. விரைவில் இந்த மையம் திறக்கப்படும். இதில் நூலகங்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் உள்பட பல்வேறு வசதிகள் இடம்பெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்

Tags:    

Similar News