உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்

Published On 2022-10-11 09:50 GMT   |   Update On 2022-10-11 09:52 GMT
  • கன்னியாகுமரியில் 3 நாள் நடைபெறுகிறது
  • தோழர் ரோகிணி பங்கேற்பு

நாகர்கோவில்:

கன்னியாகுமரியில் நவம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சி.ஐ.டி.யூ. 15-வது மாநில மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் தமிழகத்தில் இருந்து 750 சி.ஐ.டி.யூ. பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். அகில இந்திய தலைவர் ஹேமலதா, துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன், பொதுச் செயலாளர் தபன்சன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த மாநாட்டையொட்டி நவம்பர் 3-ந் தேதி மாலை 3 மணிக்கு கன்னியாகுமரியில் தியாகிகளின் தீப சங்கம் நிகழ்ச்சி நடக்கிறது. மாவட்டத்தில் இருந்து சுமார் 100 தியாகிகளின் தீபங்கள் ஏந்தி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தியாகிகளின் தீப சங்கம நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் தோழர் ரோகிணி கலந்து கொள்கிறார். கன்னியா குமரியில் 3 நாட்கள் நடக்கும் மாநாட்டை தொடர்ந்து 6-ந் தேதி மாலை நாகராஜா கோவில் திடலில் பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்த பொதுக் கூட்டத்தையொட்டி அன்றைய தினம் வெட்டூர்ணிமடத்தில் இருந்து நாகராஜா கோவில் திடல் வரை ஒரு லட்சம் பேர் கலந்து கொள்ளும் பேரணியும் நடக்கிறது.

சி.ஐ.டி.யூ. மாநில மாநாடு நடப்பதையொட்டி மாநாட்டு வரவேற்பு குழு அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று பார்வதிபுரம் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு வரவேற்பு குழு தலைவர் வக்கீல் செலஸ்டின் தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் சிங்காரம் வரவேற்றார். மேயர் மகேஷ் வரவேற்பு குழு அலுவ லகத்தை திறந்து வைத்து பேசினார்.

நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் செல்லசாமி, மண்டல தலைவர் ஜவகர், சி.ஐ.டி.யூ. பொருளாளர் சித்ரா, நிர்வாகிகள் அகமது உசேன், கண்ணன், பெருமாள், மரிய ஸ்டீபன், சுரேஷ், மோகன், லட்சுமணன், சந்திரபோஸ், பேராசிரி யர்கள் நாகராஜன், மனோகர் ஜெஸ்டஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News