உள்ளூர் செய்திகள்
ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ முன்னிலையில் மாற்றுகட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்
- 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்தனர்
- ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்
மார்த்தாண்டம் :
கிள்ளியூர் பேரூராட்சி, வேங்கோடு பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் அபிஷேக் மற்றும் ஆகாஷ் தலைமையில் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. சால்வை அணிவித்து காங்கிரஸ் உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டாக்டர் பினுலால்சிங், கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராஜசேகரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.