உள்ளூர் செய்திகள்

நாகர்கோவில் வடசேரியில் கொட்டும் மழையில் ரப்பர் கழக தொழிலாளர்கள் திடீர் மறியல்

Published On 2022-11-14 09:53 GMT   |   Update On 2022-11-14 09:53 GMT
  • 60 பெண்கள் உள்பட 250 பேர் கைது
  • குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்ட அரசு ரப்பர் கழக தொழிலா ளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை கடந்த 11-ந் தேதியன்று நாகர்கோவில் வடசேரியில் உள்ள அரசு ரப்பர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது.

அரசு ரப்பர் கழக நிர்வாக இயக்குனர் தின்கர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து ரப்பர் மற்றும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் வட சோி அரசு ரப்பர் கழக அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்ப ட்டது.

அதன்படி அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் இன்று நாகர்கோ வில் வடசேரி அரசு ரப்பர் கழக அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடு பட்டனர்.

சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க பொதுச் செயலாளர் வல்சலகுமார் தலைமை தாங்கினார். துணை தலைவா் நடராஜன், ஐ.என்.டி.யு.சி. கிழக்கு மாவட்ட தலைவா் பொன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், காங்கிரஸ் கிழக்கு மாவட்ட முன்னாள் தலை வர் ராதாகிருஷ்ணன், தொ.மு.ச. மாநில துணை தலைவர் இளங்கோ, எம்.எல்.எப். தலைவர் பால்ராஜ், செயலாளர் ஜெரால்டு மற்றும் அனைத்து தொழிற் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். அவா்கள் கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி னா். பின்னர் அவர்கள் அனைவரும் அரசு ரப்பா் கழக அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்தி னா்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் மறியலில் ஈடுபட்டவர்க ளுக்கும், போலீசாருக்கு இடையே லேசான சலசலப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நாகா்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு நவீன் குமார் தலைமையில் இன்ஸ் பெக்டர்கள் திருமுருகன், ராமர், ஜெயலட்சுமி ஆகி யோா் மறியலை கைவிட்டு கலைந்து செல்லும்படி போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் கூறினர். ஆனால் தொடர்ந்து மறியல் போராட்டம் நடந்தது.

இதனைதொடர்ந்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்க பொது செயலாளர் வல்சல குமார் மற்றும் 60 பெண்கள் உள்பட 250 பேரை வடசேரி போலீசார் கைது செய்தனர். அவர்களை அங்குள்ள ஒரு மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர் அனை வரும் விடுவிக்கப்பட்டார்கள்.

Tags:    

Similar News