திங்கள் நகர் அருகே 7-ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷம் செய்த வாலிபர் கைது
- 7-ம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்றுள்ளார்.
- சிறுமியின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
குளச்சல் :
திங்கள்நகர் அருகே உள்ள வெட்டுக்காட்டுவிளையை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 25. வெல்டிங் தொழிலாளியான இவர் அதே பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 7-ம் வகுப்பு மாணவியை தனியே அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் வீட்டின் மாடியில் மாணவியிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மாடிக்கு வந்த சிறுமியின் அக்காள், அதனை பார்த்து கூச்சலிட்டார். இதையடுத்து பிரசாந்த் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இது குறித்து சிறுமியின் தந்தை, குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிரசாந்த் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகிய அவரை தேடி வந்தனர்.
இந்தநிலையில் குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பிரசாந்த் சரணடைந்தார். அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.