கோப்பு படம்
நாகர்கோவில் அருகே கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு
- 8 பேர் கொண்ட கும்பல் கைவரிசை
- இந்த கொள்ளை சம்பவத்தில் வெளியூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நாகர்கோவில்:
தோவாளை தெக்கூரைச் சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி வசந்தா (வயது 60).
கணவன்-மனைவி இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் திருமண வீட்டிற்கு சென்றனர். பின்னர் இருவரும் இரவு 10 மணி அளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் கிறிஸ்தவ நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது 4 மோட்டார் சைக்கிளில் வந்த 8 வாலிபர்கள் திடீ ரென முத்துவின் மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்தனர்.
இதையடுத்து முத்து மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். ஆனால் மர்மநபர்கள் முத்துவின் மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று வசந்தாவின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தனர். உடனே வசந்தா கழுத்தில் கிடந்த செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். செயினை பறித்த கொள்ளையர்கள் வசந்தாவை காலால் மிதித்து கீழே தள்ளினார்கள்.
அப்போது வசந்தாவின் கையில் ஒரு செயினும் மற்றொரு செயின் சிறிதளவு சிக்கியது. கொள்ளையர் கையில் 4 பவுன் சிக்கியது. இதையடுத்து கொள்ளை யர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். படுகாயம் அடைந்த வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.வசந்தா, முத்துவிடம் விசா ரணை நடத்திய போலீ சார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நேற்று இரவு முழுவதும் வாகன சோதனை நடத்தப் பட்டது. ஆனால் கொள்ளை யர்கள் யாரும் சிக்கவில்லை.
இந்த நிலையில் இன்று காலை கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். 8 பேர் கொண்ட கும்பல் பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தியுள்ளது.
இந்த கொள்ளை சம்பவத்தில் வெளியூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.