ஒசூர் கெலவரப்பள்ளி அணை பிரதான மதகில், 2-இரும்புக்கயிறுகளில், ஒன்று துண்டானதால், மற்றொரு இரும்புக்கயிறு மட்டும் தாங்கிப் பிடித்தவாறு உள்ளதை படத்தில் காணலாம்.
பிரதான மதகின் இரும்புக்கயிறு துண்டிப்பு: ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து அதிகளவில் தண்ணீர் வெளியேற்றம்
- தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1060 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
- 5-வது பிரதான மதகு ரோப், துண்டானதால் தற்போது அந்த மதகு செயல்படுத்த முடியாத வகையில் இருந்து வருகிறது.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை உள்ளது.
7மதகுகளை கொண்ட இந்த அணையில், ஒவ்வொரு மதகுகளை திறந்து மூடுவதற்கு இருபுறமும் 2 ரோப்கள் (இரும்பு கயிறுகள்) தாங்கி பிடிக்கின்றன. பிரதான 5-வது மதகின் 2 இரும்புக்கயிறுகளில், ஒன்று துண்டான நிலையில், 3 நாட்களாக அணையிலிருந்து நீர் அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் தற்போது 26.9 அடியாக, நீர் குறைக்கப்பட்டுள்ளது.
இன்று, அணைக்கு வினாடிக்கு நீர்வரத்து 722 கன அடியாக இருந்த நிலையில், தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1060 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை நீர் வேகமாக குறைந்து வருவதால், அனைத்து மதகுகளை சரிசெய்ய பொதுப்பணித்து றையினர் வேகம் காட்டி வருகின்றனர். 5-வது பிரதான மதகு ரோப், துண்டானதால் தற்போது அந்த மதகு செயல்படுத்த முடியாத வகையில் இருந்து வருகிறது, மேலும், அணையில் நீர் குறைந்து ஏரி போன்று காட்சியளிக்கிறது.