உள்ளூர் செய்திகள்

டவுன் நெல்லையப்பர் கோவில் ரத வீதி பகுதிகளில் 2 கொசு மருந்து எந்திரங்கள் மூலம் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் புகை மருந்து அடித்த காட்சி.

டெங்கு கொசு உற்பத்தியாவதை தடுக்க டவுன் ரத வீதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரம்

Published On 2023-02-05 14:42 IST   |   Update On 2023-02-05 14:42:00 IST
  • தொடர்மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.
  • டவுன் தெருக்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர்.

நெல்லை:

கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக நெல்லை மாநகர பகுதியில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். கொசு புழுக்களால் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பதை தடுக்கும் வகையில் மாநகர பகுதியில் உள்ள தெருக்களில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும், வீடு வீடாக சென்று குடிதண்ணீரின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கமிஷனரின் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் வெங்கட்ராமன் அறிவுரைப்படி, மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி டவுன் ரத வீதிகள் மற்றும் அதனை சுற்றிலும் அமைந்துள்ள தெருக்களில் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொசு மருந்து அடித்தனர். இந்த பணியின் போது தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு கொசு மருந்து அடித்ததோடு, வீடு வீடாக சென்று தண்ணீரின் தரத்தையும் ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News