உள்ளூர் செய்திகள்

பேக்கரிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-11-24 09:23 GMT   |   Update On 2023-11-24 09:23 GMT
  • தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் அழிக்கப்பட்டது.
  • அபராத தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம், வெளி ப்பாளையம், மருத்துவமனை சாலையில் அமைந்துள்ள பேக்கரியில் பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நிறுவனம் சுகாதாரமான முறையில் பேக்கரியை பராமரிக்க வில்லை.

உணவு தயாரிப்பு இடம் சுகாதாரமற்று இருந்தது தெரிய வந்தது.

ஆனால் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெற்றிருந்தனர்.

பின்னர் அங்கிருந்த காலாவதியான மற்றும் தயாரிப்பு விபரம் இல்லாத பேக்கரி பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் கைப்பற்றப்பட்டு, பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.

ஒருவார காலத்திற்குள் உணவு தயாரிக்கும் இடம் சுத்தப்படுத்தி, குறைகள் சரிசெய்து, வெள்ளையடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சுகாதாரக் கேட்டிற்கான அபராதத் தொகை விதிக்க மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

Tags:    

Similar News