உள்ளூர் செய்திகள்

சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் ஒசூர் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு சீல் வைப்பு

Published On 2022-07-16 16:06 IST   |   Update On 2022-07-16 16:06:00 IST
  • ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்து வந்தனர்.
  • மேலும், மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்வதற்கு 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஓசூர்,  

ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்து வந்தனர்.இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தனியார் மருத்துவமனை ஸ்கேன் சென்டருக்கு நேற்று மாலை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ள நிலையில் நோயாளிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என மாவட்ட களப்பணி இணை இயக்குனர் டாக்டர் பரமசிவம் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், மருத்துவமனை நிர்வாகம் மேல்முறையீடு செய்வதற்கு 4 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News