புதுச்சேரி
null

காரைக்காலில் குறை கேட்பு முகாமில் அதிகாரிகள், ஊழியர்கள் நேரத்தோடு வராததால் பொதுமக்கள் அவதி

Published On 2023-05-16 07:40 GMT   |   Update On 2023-05-16 10:08 GMT
  • பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது.
  • பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை.

புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு துறை அலுவலகங்களிலும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் 15-ந் தேதி நடத்த வேண்டும். அன்றைய தினம் பொது விடுமுறையாக இருந்தால், அடுத்த வேலை நாளில் பொதுமக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்த்து வைக்க வேண்டும் என, கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டார்.

அதன்படி, கடந்த சில மாதங்களாக காரைக்காலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் மாதந்தோறும் பொதுமக்கள் குறை கேட்பு நாள் நடந்து வந்தது. அதேபோல், மாவட்ட கலெக்டர் குலோத் துங்கன் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களில் திடீர் ஆய்வு செய்து, காரைக் கால் மாவட்டங்களில் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங் களில் பணிபுரியும் ஊழி யர்கள் அரசு உத்தரவுப்படி காலை 8:45 மணிக்கு பணியில் இருக்க வேண்டும் என்றும், குறித்த நேரத்திற்கு பணிக்கு வராதவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அந்தவகையில், மாதம் ஒரு முறை நடைபெறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காரைக்காலில் நடைபெற்றது ஆனால் பல்வேறு அரசுத் துறைகளில் துறை அதிகாரி கள், ஊழியர்கள் காலை 10 மணிவரை வரவில்லை. அதேபோல், கோடை வெயி லில் பொதுமக்களுக்கான குடிநீர் கூட அரசுத்துறை அலுவலகங்களில் இல்லை. பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருந்து தங்கள் புகார் களை வழங்கி சென்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News