உள்ளூர் செய்திகள்
பணியின் போது வீரமரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தஞ்சையில், பணியின் போது வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு
- பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர், ராணுவத்தினருக்கு வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
- ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம்.
தஞ்சாவூர்:
இந்தியா முழுவதும் பணியின் போது உயிரிழந்த காவல்துறையினர், ராணுவத்தினர், துணை ராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாளாக அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி இன்று தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவு ஸ்தூபியில் பணியின் போது உயிரிழந்த காவலர்கள், வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.
தஞ்சை சரக்க டி.ஐ .ஜி கயல்விழி, போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா மற்றும் போலீசார் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.