உள்ளூர் செய்திகள்

டவரில் ஏறி மிரட்டல் விடுத்த ராம்குமார்.

தஞ்சையில், டவரில் ஏறி என்ஜினீயர் தற்கொலை மிரட்டல்

Published On 2022-09-21 10:48 GMT   |   Update On 2022-09-21 10:48 GMT
  • சில அடி உயரத்தில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார்.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த எனது பாட்டி மரணத்தில் சந்தேகம் உள்ளது.

தஞ்சாவூர்:

தஞ்சையை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 30) என்ஜினீயரிங் படித்துள்ளார்.

இன்று அவர் தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையம் அருகே உள்ள போலீஸ் குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள வயர்லெஸ் டவரில் திடீெரன வேக வேகமாக ஏறினார்.

இதனை பார்த்த போலீசார், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போது ராம்குமார், சில அடி உயரத்தில் நின்று கொண்டு கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக மிரட்டல் விடுத்தார். அதிர்ச்சியடைந்த போலீசார் எதுவாக இருந்தாலும் கீழே இறங்கி வாருங்கள். பேசி சரிசெய்து கொள்ளலாம் என்றனர்.

ஆனால் ராம்குமார் இறங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் உங்களது கோரிக்கையை கீழே இறங்கி வந்து தெரிவியுங்கள் என்றனர். இதையடுத்து ராம்குமார் டவரில் இருந்து கீழே இறங்கினார்.

பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு ராம்குமார் போலீசாரிடம் கூறும்போது:-

எனது பாட்டி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது.

அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை என்னிடம் தர வேண்டும் என்று கேட்டேன்.

ஆனால் கொடுக்கவில்லை. இதனால் மனமுடைந்த நான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து டவரில் ஏறினேன் என்றார்.

இதனை தொடர்ந்து போலீசார் ராம்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ராம்குமார் ஏற்கனவே ஒருமுறை டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்திருந்தார்.

தற்போது அவர் 2-வது முறையாக தற்கொலை மிரட்டல் விடுத்திருப்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News