உள்ளூர் செய்திகள்

ராயக்கோட்டையில் கந்து வட்டி கேட்டு மிரட்டிய முதியவர் மீது வழக்குப்பதிவு

Published On 2022-07-17 14:04 IST   |   Update On 2022-07-17 14:04:00 IST
  • ஓய்வு பெற்ற வங்கி கேசியர் போலீசில் புகார் செய்தார்.
  • 6 மாதமாக முழு வட்டி கட்ட முடியதால் ராயக்கோட்டையில் உள்ள 840 சதுர அடி வீட்டுமனை நிலத்தை எழுதிக்கொடுத்தார்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே உள்ள உடையாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது60).இவர் ஓய்வு பெற்ற வங்கி கேசியர். இவர் கடந்த 2011-ம் ஆண்டு ராயக்கோட்டையில் உள்ள ஓசூர் சாலையை சேர்ந்த ஆறுமுகம் (60) என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார்.

அந்த கடனுக்காக மாதமாதம் ரூ.12 ஆயிரம் வட்டி கடந்த 2 ½ வருடம் கட்டி வந்துள்ளார்.

அதன்பிறகு 6 மாதமாக முழு வட்டி கட்ட முடியதால் ராயக்கோட்டையில் உள்ள 840 சதுர அடி வீட்டுமனை நிலத்தை எழுதிக்கொடுக்க சொல்லி கேட்டதாகவும் ரூ 6,30,000- மதிப்புள்ள வீட்டுமனை இடத்தை 2014 ம் ஆண்டு ஆறுமுகத்திற்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்தார்.

பின்னர் ஆறுமுகம் ரூ.60 ஆயிரம் ரூபாயை கொடுத்துள்ளார்.

15 நாள் கழித்து மீண்டும் வந்து மாதமாதம் ரூ.5000 வட்டி கொடுக்க வேண்டும் என்று சந்திரனிடம் கேட்டுள்ளார்.

இது குறித்து சந்திரன் கொடுத்த புகாரின்பேரில் ராயக்கோட்டை போலீசார் கந்துவட்டி தடை சட்டத்தில் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News