உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் அரசு மருத்துவக்கல்லூரி சாலை மழையால் சேதம்

Published On 2022-09-07 15:27 IST   |   Update On 2022-09-07 15:27:00 IST
  • அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் ஆய்வு செய்தார்
  • சாலையை சீரமைத்து தருமாறும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஊட்டி

ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகள் குறித்தும் வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடர்ந்து அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் விவ சாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் மூலமாக விவசாய கடன்களும், கடன் பெறுவதற்கான அனுபோக சான்றும் வழங்கப்படுகிறது. ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்கின்ற காரணத்தினால் மருத்துவமனைக்குச் செல்லும் சாலையை சரி செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.சாலை பழுதடைந்துள்ளதால் மருத்துவக் கல்லூரிக்குச் செல்ல சிரமமாக உள்ளதாகவும், வாகனங்கள் சென்று வர ஏதுவாக சாலையை சீரமைத்து தருமாறும் மாணவா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

குறிப்பிட்ட கால கெடுவுக்குள் இச்சாலையை சரி செய்து தர பொதுப் பணித் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, மாவட்ட கலெக்டர் அம்ரித், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேசன், மாவட்ட வன அலுவலா் சச்சின் போஸ்லே துக்காராம், ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் மனோகரி, தி.மு.க. ஊட்டி நகர செயலாளர் ஜார்ஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா். 

Tags:    

Similar News