உள்ளூர் செய்திகள்

கொலை செய்யப்பட்ட ஜெகன்.

நெல்லையில் பா.ஜனதா நிர்வாகி உடலை வாங்க மறுத்து 4-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

Published On 2023-09-03 14:45 IST   |   Update On 2023-09-03 14:45:00 IST
  • ஜெகனுக்கும்,பிரபுவுக்கும் இருந்து வந்த முன்விரோதத்தில் ஜெகன் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.
  • தலைமறைவாக உள்ள பிரபுவை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

நெல்லை, செப்.3-

பாளை மூளிக்குளம் விரல் மீண்ட நாயனார் தெருவை சேர்ந்தவர் ஜெகன். இவர் நெல்லை மாவட்ட பா.ஜனதா இளைஞரணி பொதுச்செயலாளாராக இருந்தார்.

படுகொலை

கடந்த 30-ந்தேதி இரவு அவர் மூளிக்குளம்- வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கும்பல் அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச்சென்றது. இதுகுறித்து பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அதில் நெல்லை மாநகர தி.மு.க. பிரமுகர் பிரபுவுக்கும், ஜெகனுக்கும் இருந்து வந்த முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக பாளையை சேர்ந்த அனீஸ், அஜித்குமார், பாஸ்கர், சந்துரு, மாரிச்செல்வம், விக்னேஸ்வ ரன், வள்ளிக்கண்ணு, முத்து இசக்கி ஆகிய 8 பேர் கைதாகினர்.

தி.மு.க. பிரமுகர் தலைமறைவு

நேற்று பாளை திம்மராஜ புரத்தை சேர்ந்த மாணிக்க ராஜா (27), தச்சநல்லூர் கரையிருப்பு முத்துபாண்டி(25) ஆகியோர் கைது செய்யப்பட்ட னர். இந்நிலையில் பாளை செந்திவேல் நகர் பகுதியை சேர்ந்த பரமராஜ்(29) என்பவர் கைது செய்யப்பட்டார். இதுவரை இந்த கொலையில் 11 பேர் கைதாகி உள்ளனர்.

எனினும் தி.மு.க. பிரமுகர் பிரபு தொடர்ந்து தலைமறை வாக உள்ளார். அவரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இதற்கிடையே பிரபுவை கைது செய்யும்வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என ஜெகன் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக அவர்கள் போராட்ட த்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News