உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் குரூப் 4-க்கான இலவச மாதிரித் தேர்வு

Published On 2022-07-17 14:03 IST   |   Update On 2022-07-17 14:03:00 IST
  • முதல்முறையாக குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.
  • நேற்று நடந்த தேர்வில் 385 பேர் பங்கேற்று‘ தேர்வு எழுதினர்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யத்தால் குரூப் 4ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வு வருகிற 24&ந் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக பயிற்சி மையம் அமைக்கப்பட்டு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அத்துடன் குரூப்-4 தேர்வில் இம்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற வேண்டும் என நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக முதல்முறையாக குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் பயன்பெறும் வகையில் இலவச மாதிரித் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த மாதிரி தேர்வு நேற்று கிருஷ்ணகிரி அரசு மகளிர்மே ல்நிலைப்பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெற்றது. இந்த மாதிரி தேர்வினை எழுத மாவட்டத்தில் மொத்தம் 550 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த தேர்வில் 385 பேர் பங்கேற்று' தேர்வு எழுதினர்.

இந்த தேர்வினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர், இளம் வேலைவாய்ப்பு அலுவலர்கள் சுந்தரம், மோனிஷா ஆகியோர் கண்காணித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மகேந்திரன் செய்திருந்தார். இந்நிலையில் இந்த தேர்விற்கான வினா மற்றும் விடைத்தாள்களை தேர்வர்களிடமே வழங்கி, சரிபார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் இந்த தேர்வு மிகவும் பயனுள்ளதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News