உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-02 14:52 IST   |   Update On 2023-04-02 14:52:00 IST
  • சென்னை எக்ஸ்பிரஸ் வே நான்கு வழிசாலை, ஒசக்கோட்டை-பாலக்கோடு - தர்மபுரி நான்குவழிச்சாலை பணிகள் நடக்கிறது.
  • கிருஷ்ணகிரி டோல்கேட் பயனற்ற நிலைக்கு தள்ளப்படும். கட்டண உயர்வால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர்.

கிருஷ்ணகிரி,  

கிருஷ்ணகிரி டோல்கேட்டை உடனடியாக அகற்ற கோரி கிருஷ்ணகிரி டவுன் லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரியை£ளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்தும், டோல்கேட்டை அகற்ற கோரியும் கிருஷ்ணகிரி டோல்கேட் முன் கிருஷ்ணகிரி டவுன் லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பிரான்சிஸ் சேவியர் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 55 டோல்கேட்களில், 29 டோல்கேட்களுக்கு கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 32 டோல்கேட்டுகளை காலாவதி ஆனதாக தமிழக அரசு கூறி மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. அப்படியிருக்க அந்த டோல்கேட்டுகளுக்கும் கட்டணம் உயர்த்தியதை கண்டிக்கிறோம். காலாவதியாக அறிவிக்கப்பட்ட கிருஷ்ணகிரி டோல்கேட்டை அகற்ற வேண்டும். சென்னை எக்ஸ்பிரஸ் வே நான்கு வழிசாலை, ஒசக்கோட்டை-பாலக்கோடு - தர்மபுரி நான்குவழிச்சாலை பணிகள் நடக்கிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால் கிருஷ்ணகிரி டோல்கேட் பயனற்ற நிலைக்கு தள்ளப்படும். கட்டண உயர்வால் கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் பாதிக்கப்படுவர். எனவே கிருஷ்ணகிரி டோல்கேட்டை உடனடியாக அகற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணகிரி டவுன் லாரி மற்றும் மல்டி ஆக்ஸில் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தண்டபாணி, டெம்போ உரிமையாளர்கள் சங்க தலைவர் டேவிட், ஆலோசகர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Similar News