உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டணம் பேரூராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பையை உரமாக தயாரித்து விற்பனை

Published On 2022-07-21 14:49 IST   |   Update On 2022-07-21 14:49:00 IST
  • காவேரி பட்டினம் பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து நவீன எந்திரங்கள் மூலம் உரங்களாக தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது.
  • பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தகவல்.

காவேரிப்பட்டணம்,

காவேரிப்பட்டணம் பேரூ ராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகளாக தரம் பிரித்து அதிலிருந்து உரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என பேரூராட்சித் தலைவர் அம்சவேணி செந்தில்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக அரசு நகராட்சி பேரூராட்சிகளில் சேரும் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து,அதை உரமாக தயாரித்து விற்பனை செய்யலாம் என உத்தரவு விடுத்துள்ள அடிப்படையில் காவேரி பட்டினம் பேரூராட்சியில் சேகரிக்கும் குப்பைகளை தரம் வாரியாக பிரித்து நவீன எந்திரங்கள் மூலம் உரங்களாக தயாரிக்கப்பட்டு விற்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

எனவே,விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இதனை பயன்படுத்தி தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்ளவும், அரசுக்கு வருவாய் கிடைத்தி டவும், கேட்டுக்கொள்கிறேன் என்றார் .

நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில்குமார், வார்டு கவுன்சிலர்கள் நித்யா, கீதா, தமிழ்ச்செல்வி, கோகுல்ராஜ் மற்றும் பாரதிராஜா, சிவப்பிரகாசம், மாருதி, முருகன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News