உள்ளூர் செய்திகள்
குடிபோதை தகராறில் வாலிபரை கொன்று கிணற்றில் வீசியவர் கைது
- உடலை அருகேயுள்ள கிணற்றில் வீசிவிட்டு நண்பருடன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
- மஞ்சுநாத்தை கைது செய்தனர். மற்றொரு மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கெலமங்கலம் செந்தில்நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 27).
இவர் கொட்டப் பாளையம் பகுதியில் ஒரு கிணறு அருகே சென்றபோது அங்கு பசவண்ணபுரத்தை சேர்ந்த மஞ்சு (எ) மஞ்சுநாத் (26),மற்றொரு மஞ்சுநாத்(25) ஆகியோர் மது அருந்திக்கொண்டு இருந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக சென்ற ராஜேந்திரனுக்கு, அவர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மஞ்சுநாத் தன்னிடமிருந்த கத்தியால் ராஜேந்திரனை குத்திக்கொன்று அவரது உடலை அருகேயுள்ள கிணற்றில் வீசிவிட்டு நண்பருடன் அங்கிருந்து தப்பிவிட்டார்.
இது குறித்து ராஜேந்திரனின் உறவினர் நாராயணன் என்பவர் தந்த புகாரின்பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கொன்ற மஞ்சுநாத்தை கைது செய்தனர். மற்றொரு மஞ்சுநாத்தை தேடி வருகின்றனர்.