தமிழ்நாடு செய்திகள்

என்னுடைய இலக்கில் வென்றுவிட்டேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2026-01-24 10:01 IST   |   Update On 2026-01-24 10:01:00 IST
  • மகளிர் விடியல் பயணத்தில் பெண்கள் தோராயமாக ரூ.60,000 சேமித்துள்ளனர்.
  • உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் பயில்கின்றனர்.

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரின் 5-வது நாள் அமர்வு தொடங்கியது. ஆளுநர் உரை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் உரை வழங்க உள்ள நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பங்கேற்கவில்லை.

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து பேசியதாவது:

* 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் சீரழிந்து இருந்தது.

* 5 ஆண்டு கால ஆட்சி முடிவுறும் நிலையில் மிகமிக மகிழ்ச்சியாக உள்ளேன்.

* மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதே எனது மகிழ்ச்சிக்கு காரணம்.

* இந்தியாவில் மற்ற மாநிலங்கள் தமிழகத்தை அண்ணாந்து பார்க்கின்றன.

* என்னுடைய இலக்கில் நான் வென்று விட்டேன்.

* தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும்போது எங்கள் சாதனைகளை நாங்களே மிஞ்சும் அளவில் இருக்கும்.

* மகளிர் விடியல் பயணத்தில் பெண்கள் தோராயமாக ரூ.60,000 சேமித்துள்ளனர்.

* மகளிர் உரிமை தொகை திட்டத்தில ஒவ்வொரு பெண்களுக்கும் ரூ.29,000 வழங்கி உள்ளோம்.

* உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் தமிழக மாணவர்கள் பயில்கின்றனர்.

* அரசியல் ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளோம்.

* 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

* ஆட்சி பொறுப்பேற்று 8 ஆயிரத்திற்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.

* சென்னை தவிர மற்ற மாவட்டங்களுக்கு 173 முறை பயணம் மேற்கொண்டுள்ளேன் என்று பேசினார்.

Tags:    

Similar News