ஓசூர் பி.எம்.சி.டெக் கல்லூரியில் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு மாணவர் சேர்க்கை
- இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் படிப்பு மையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.
- அனைத்து படிப்புகளும் பட்டியல் இன மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா ஓசூர் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் மத்திய அரசின் புதுடெல்லி இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் படிப்பு மையம் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இளங்கலைப் படிப்புகளான பி.ஏ., பி.எஸ்.சி., பி.காம்., பி.எஸ்.டபள்யூ., பி.சி.ஏ., மற்றும் முதுநிலைப் படிப்புகளான எம்.ஏ., எம்.காம்., எம்.எஸ்.டபள்யூ., எம்.ஏ (சைக்காலாஜி) எம்.சி.ஏ., எம்.பி.ஏ படிப்புகளில் நடப்புக் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
சிறு குறு தொழில் நடத்துபவர்கள் புதிய தொழில் தொடங்கவுள்ள மாணவர்கள் தொழில் முனைவோர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இளங்கலை படிப்பான எம்.எஸ்.எம்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இந்த கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஆறுமாத சான்றிதழ் படிப்புகளும் இம்மையத்தில் செயல்படுவதால் அதற்கான மாணவர் சேர்க்கையும் நடைப்பெற்று வருகிறது. அனைத்து படிப்புகளும் பட்டியல் இன மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
பிற மாணவர்கள் மிகமிகக் குறைந்த கட்டணம் செலுத்தினால் போதுமானது. எவ்வித வயது வரம்பும் யாருக்கும் கிடையாது. வீட்டிலிருந்தோ அல்லது பணிசெய்யும் இடத்திலிருந்தோ இப்பாடப் பிரிவுகளில் சேர்ந்து தொலைத்தூர கல்வியாக படிக்கலாம்.
இதன் மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் மத்திய மாநில அரசுகளால் அங்கீரிக்கப்பட்டவை. இதில் சேர்ந்து பயிலும் மாணவர்களுக்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆலோசனை வகுப்புகள் மிகச் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு நடைபெறும்.
மேலும் விவரங்கள் அறிய இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் சேர்க்கைக்கு https://ignouadmission.samarth.edu.in/ என்ற இணையதள சேவையை பயன்படுத்தி கொள்ளவும் என பி.எம்.சி.டெக் ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், கைலாசம் ஆகியோர் தெரிவித்தனர்.