உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாநகர பகுதி தி.மு.க. நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு நாளை தாக்கல்- பிரகாஷ் எம்.எல்.ஏ.அறிக்கை

Published On 2022-07-20 15:13 IST   |   Update On 2022-07-20 15:13:00 IST
  • நாளை காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடக்கும்.
  • தலைமைக்கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் வழங்க வேண்டும்.

ஓசூர்,

கிருஷ்ணகி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தி.மு.க.வின் 15-வது கட்சித்தேர்தலையொட்டி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் மாநகரம், 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.

அந்த பகுதி நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், நாளை (வியாழக் கிழமை) காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை, ஓசூரில் தளி சாலையில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இதில், தலைமை கழகத்தால் தேர்தல் ஆணை யாளராக அறிவிக்கப்பட்டு உள்ள முன்னாள் எம்.எல்.ஏ.வி.சி. சந்திரகுமாரிடம் வேட்பு மனுக்களை பூர்த்தி செய்து, தலைமைக்கழகம் அறிவித்துள்ள உரிய கட்டணத்துடன் வழங்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில், பிரகாஷ் எம்.எல்.ஏ. தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News