உள்ளூர் செய்திகள்

ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் மின்வாரியம் சார்பில் லிங்க் லைனை பிரகாஷ் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.

ஓசூர் ஆவலப்பள்ளி பகுதியில் மின்வாரியம் சார்பில் லிங்க் லைன்

Published On 2022-07-18 14:26 IST   |   Update On 2022-07-18 14:26:00 IST
  • பிரகாஷ் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.
  • ரூ10 லட்சம் செலவில் 30 மின்கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்தார்.

ஓசூர்,

ஓசூர் பஸ்தி, ஆவ லப்பள்ளி, புனுகன் தொட்டி மற்றும் பாரதியார் நகர் பகுதிகளில் நீண்டகாலமாக குறைந்த மின் அழுத்தம் பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது குறித்து ஓசூர் மின் வாரிய செயற் பொறியாளர் கிருபானந்தனிடம் அந்த பகுதி மக்கள், பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தருமாறு மனு அளித்தனர்.

மனுவை பரிசீலித்த செயற்பொறியாளர், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொண்டு, அந்த பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் வாரியத்தின் மூலமாக ரூ10 லட்சம் செலவில் 30 மின்கம்பங்கள் அமைக்க ஏற்பாடு செய்தார்.

மேலும், ஆவலப்பள்ளி மற்றும் முத்தாலி கிராமத்திற்கு இடையே லிங்க் லைன் போடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் இந்த லிங்க் லைனை இயக்கி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, ஒசூர் மின்வாரிய செயற்பொ றியாளர் கிருபானந்தன், கவுன்சிலர்கள் சீனிவாசலு, ரவி, கிருஷ்ணப்பா, ஓசூர் ஒன்றிய தி.மு.க.செயலாளர் கஜேந்திர மூர்த்தி, மின் வாரிய உதவி பொறியாளர் மணிவண்ணன், மின் வாரிய அலுவலர்கள், மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News