உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு கோலப்போட்டி

Published On 2022-07-20 15:10 IST   |   Update On 2022-07-20 15:10:00 IST
  • ஓசூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.
  • இதனை மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா பார்வையிட்டார்.

ஓசூர், 

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதையொட்டி ஓசூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கோலப்போட்டி நடைபெற்றது.

இதனை மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா பார்வையிட்டார். அப்போது மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன், துணை மேயர் ஆனந்தய்யா மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News